திருவெண்ணெய்நல்லூர், ஆக. 13 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் காத்தவராயன், விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்குமார், ஜெய் பீம் கமல், ஆட்டோ ஓட்டுனர் சங்க இணை செயலாளர் அய்யனார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பூவை ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது தூய்மை பணியாளர்களின் பணியை தனியாருக்கு தாரை வார்த்தலை தடுத்தல், தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்தல், தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஆ.மா. இளவரசு, ஆதி. குப்பன், ஜோதி, நீலத்துண்டு ஆறுமுகம், மாயகிருஷ்ணன், வினோதன் மற்றும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் நந்தகோபால், சிந்தனைச் செல்வன், தசரதன், கார்த்தி, லோகு, தீர்த்தமலை, மதன், நந்து, தீபக், சக்தி, கைசிக், கவியரசன், அருள், மாயக்கண்ணன், ஜெயராம், பேரரசு, கௌஷிக், கார்த்திக், ஜெனித், கவி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக செல்வகுமார் நன்றி கூறினார்.



