திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 29 –
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 1 முதல் 7 வார்டுகளுக்கு முதற்கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் தலைமை தாங்கினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி, நகர செயலாளர் பூக்கடை கணேசன், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கிவைத்து மகளிர் உரிமைத் தொகை, பட்டா மற்றும் மின் பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட துறைகள் சார்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் 15 துறைகள் சார்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.