போகலூர், ஆகஸ்ட் 3 –
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அரண்மனையில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கூட்டத்திற்கு நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் டி-ஷர்ட் அணிந்து மேள தாளங்கள் முழங்க ஆடி பாடி மகிழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி கே பழனிச்சாமி சுற்று பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உற்சாகமாக உரை நிகழ்த்தி வருகிறார்.
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியம் வாய்ந்த தொகுதி என்பதால் ராமநாதபுரம் மீது தனி கவனம் செலுத்தி வருகை தந்தார். அவரது எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றித் தரும் வகையில் ராமநாதபுரம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகர் செயலாளர் பால்பாண்டியன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என பெரும் பட்டாளத்தை திரட்டி விட்டார். ராமநாதபுரம் நகர் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று கவனத்தில் கொண்டு நகர செயலாளர் பால்பாண்டியன் அதிக கவனம் செலுத்தி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தித் தரும் ஒரே தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை கழகத் தொண்டர்கள் வரை விளக்கிக் கூறி 2026 தேர்தல் அதிமுக அமோக வெற்றி பெற்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக மீண்டும் உருவாக வேண்டும் என்ற உறுதிப்பாடுடன் இளைஞர் பட்டாளத்தை திரட்டி வான வேடிக்கையுடன் ராமநாதபுரம் சர்ச் ஸ்டாப் முதல் கூட்டம் நடைபெற்ற அரண்மனை வரை கே. பழனிச்சாமி வந்த வாகனத்தை திருவிழா தேர் போல் வடம் பிடித்து மக்கள் இழுத்து செல்லும் வகையில் காணும் காட்சி போல் நகர் செயலாளர் பால்பாண்டியன் பிரச்சார வாகனத்தை திருவிழா தேர் போல் மக்கள் வெள்ளத்தில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தது அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
அத்துடன் வரலாறு காணாத கூட்டம் அலைகடலென திரண்டு அரண்மனை பகுதியே திக்கு முக்காடும் அளவுக்கு பார்க்கும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் திரளாக நின்று இருந்தது எடப்பாடி கே பழனிச்சாமிக்கு மேலும் உற்சாகத்தை அளித்து ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் கூடுதல் நேரம் எடுத்து அவர் மக்களிடம் நீண்ட உரை ஆற்றி சென்றார்.