தக்கலை, ஜுலை 1 –
தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் நேற்று மாலையில் ரோந்து சென்றனர். அப்போது பருத்திகோட்ட விளை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (42) என்பவர் எந்தவித அரசு அனுமதி இன்றி மது பானம் விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரை கைது செய்து 7 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூபாய் 4 ஆயிரத்து 900 போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.