திருவள்ளூர், ஜூலை 02 –
இந்தியாவில் 219 ஆண்டு பாரம்பரியம் கொண்ட வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என மாற்றப்பட்டு தற்பொழுது இந்திய அளவில் பல கோடி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது.
அதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 70 வது ஆண்டு விழா திருவள்ளூர் கிளையில் வங்கியின் மண்டல மேலாளர் பிரபாகரன், முதன்மை மேலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர்கள் திவ்யா பிரியதர்ஷினி, அருண் தேவ் அசோக்குமார் மற்றும் ஸ்மித் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற 70-வது ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன் பின்னர் பீனிக்ஸ் பேர்ட் மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட 4 சுய உதவி குழுக்களுக்கு ஒரு கோடியே 30 லட்சம் கடன் உதவி வழங்கியதுடன் மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் தாட்கோ கடன் உள்ளிட்ட ஒரு கோடியே 56 லட்சம் மதிப்பிலான கடன்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா பூ கொடுத்து ஊழியர்கள் வரவேற்ற நிலையில் கேக் வெட்டி 70ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.