திருவண்ணாமலை, நவ. 13 –
திருவண்ணாமலை தேரடி வீதி மருத்துவர் மடாலயத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில மாநாடு கட்சியின் நிறுவன தலைவர் எஸ்.கே.செல்வம் தலைமையில் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் ஏ. தட்சிணாமூர்த்தி, மாநில பொருளாளர் கே. தனலட்சுமி மாவட்ட செயலாளர் டி.எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் டிஎஸ்பி சரவணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கடந்த 2016, 2021, 2024 சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கு நிறுவன தலைவர் எஸ்.கே.செல்வம் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
தமிழகததில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய பங்களிப்போடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. புதிய மாற்றுச்சட்டங்கள் உருவாக்கி பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும், தமிழகத்தில் இயற்கை வளங்களை அழித்திட முனைவோரை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களை பாதுகாத்திட வேண்டும், ஒடுக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலவாரியத்திற்கு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் நிர்வாகிகள் பி.நாகராஜன், கே.ஏழுமலை, எஸ்.தணிகைவேல், கே.கண்ணன், எஸ்.செல்வதுரை, என்.தேவேந்திரன், எஸ்.குட்டிமணி, பி.விநாயகமூர்த்தி, எம்.எச்.முகமது சித்திக், ஏ.ஆர்.ஏழுமலை, எஸ்.எம்.வெங்கடேசன், டிஸ்கோ கே.ரவி, டி.பழனிவேல் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். ஜனனி பிரித்தி நன்றி கூறினார்.



