திருப்பூர், ஜூலை 15 –
தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு 22.07.2025 மற்றும் 23.07.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளதையொட்டி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் நாரணவரே, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.