திருப்பூர், ஜூலை 10 –
காலேஜ் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் சிலிண்டர்கள் வெடித்ததில் தகர கொட்டகையால் உருவாக்கப்பட்ட 40 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியாளர் சண்முகசுந்தரம், வட்டாட்சியாளர் கதிர்வேல், காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பின்பு பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பது குறித்து அதிகாரிகளுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் அங்கு பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டார்.