திருப்பூர், ஆகஸ்ட் 03 –
திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை கவுண்டர் 220 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சமுதாய அமைப்பினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சி 1- குமரன் சிலை முன்பு கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த விழாவிற்கு நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள்
நிகழ்ச்சி 2- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது விழாவிற்கு தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் எம்எல்ஏ துணை மேயர் பாலசுப்ரமணியம், வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் தெற்கு மாநகர மாவட்ட அவை தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் முத்தரத்தினம், துணைச் செயலாளர்கள் கனகராஜ் பொன்னுச்சாமி துணை தலைவர் கோல்டன் சண்முகம் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள்
நிகழ்ச்சி 3- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் வடக்கு மாநகர மாவட்ட செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்றது இதில் தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வேலுமணி, மாநில செயற்குழு உறுப்பினர் தம்பி வெங்கடாசலம், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், துணைச் செயலாளர் மோகன்ராஜ், துணைத் தலைவர் ரங்கராஜ், விவசாய அணி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் தேவராஜ் கவுண்டர், இளைஞர் அணி செயலாளர் கோவிந்தசாமி, வர்த்தக அணி செயலாளர் பரமேஸ்வரன், மகளிர் அணி செயலாளர் நிர்மலா தண்டபாணி, வடக்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் மற்றும் திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.