திருப்பூர், ஜூலை 17 –
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் மக்கள் – பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் திருப்பூர் மாவட்ட நாடார் சங்கம், அகில இந்திய சான்றோர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி மாநகர் திருப்பூர் கந்தசாமி லே அவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் முழு உருவ வெண்கல சிலைக்கு மேளதாளத்துடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு மாநகராட்சி அலுவலகம் முன்புறம் ஏற்பாடு செய்திருந்த மேடையில் நலத்திட்ட விழா பல்வேறு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்.வி. பூமிநாதன், திருப்பூர் மாவட்ட நாடார் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் மாவட்ட நாடார் சங்கத்தின் செயலாளர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.ஆர். வேலாயுதம், மாவட்ட திருப்பூர் மைக்கேல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நீதி கட்சியின் தலைவர் ஜெகன் அகில இந்திய சான்றோர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சதா நாடார், ஜனநாயக எழுச்சி பேரவை தலைவர் சிலம்பரசன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.