திருப்பத்தூர், ஜூலை 17 –
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளை நிறைவேற்றவில்லை என நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டமானது CITU தொழிற்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. முருகேசன், சின்னத்தம்பி, சங்கர், தமிழரசன், நரசம்மா, மாது, காவேரி, மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். CITU மாவட்ட இணை செயலாளர் ஜோதி, கன்வினர் கேசவன், ரங்கன், ரவி, காசி, செல்வம், காமராஜ், வீரபத்திரன், சிங்காரம், ஆனந்தன், வெங்கடேசன், விஜயகுமார், சிவாஜி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
கண்டன உரையில், 11 ஆண்டுகளாகியும் பணியிடையில் மரணம் மற்றும் ஓய்வு பெற்ற எட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு தொகையினை உடனடியாக வழங்கிடவும், ஓய்வு மற்றும் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதியும் மற்றும் விடுப்பு ஊதியம் இதுநாள் வரை வழங்காததை வழங்கவும், தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக மருத்துவ காப்பீடு அட்டை வழங்கவும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்கிடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 10 சதவிகிதம் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிடவும், தூய பணியாளர்களின் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை உடனடியாக விடுவித்து தரவும், மாதம் முதல் தேதியில் சம்பளத்தை வழங்கிடவும், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு முறையாக வழங்க வேண்டும் என 9 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நகராட்சி அலுவலகத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள், சிஐடியு சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சி இறுதியில் வேலூர் திருப்பத்தூர் சிஐடியு மாவட்ட தலைவர் காசி, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் அருள் ஆகியோர் நடுநிலை வழங்கினார்கள்.