திருப்பத்தூர், ஜூன் 19-
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கலந்து கொண்டு உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் பாப்பன பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுடைய படிப்பு அறிவுத்திறனை சோதித்தார். மேலும் மாணவர்கள் கணக்குப் பாடத்தில் எப்படி திறமையாக உள்ளார்கள் என்பது குறித்து டிஜிட்டல் போர்டில் கணிதப் பாடத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நேரில் சென்று ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மேல் சான்றோர் குப்பம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை ஆய்வு மேற்கொண்டு அரிசி சரியான எடை போடப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மேல் சான்றோர் குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி எழுத்தாளர் மற்றும் தலைவரை சந்தித்து அங்குள்ள கலைஞரின் கனவு இல்லம் வீடு திட்டத்தைக் குறித்தும் மற்றும் வரி வசூல் செய்வதைக் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் வட்டாட்சியர் சி.ரேவதி, மேல் சாணாங்குப்பம் வருவாய் ஆய்வாளர் யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் பாபு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்களும் பலர் கலந்து கொண்டனர்.