தென்காசி, ஜூலை 24 –
தென்காசி வடக்கு மாவட்ட திராவிடர் தமிழர் கட்சி சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ வை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சி கிராம மக்களின் அடிப்படைப் பிரச்சனையான மயான வசதி செய்து தர வேண்டும், அன்றாட பழக்க வழக்கத்திற்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து அருந்ததிய மக்களுக்கும் தேவையான மிக முக்கியமான கோரிக்கையான சங்கரன் கோவில் நகர மையப்பகுதியில் திருமண மண்டபம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட ராஜா எம்எல்ஏ இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திராவிட தமிழர் கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநில துணை பொது செயலாளர் வீரபாண்டியன், வடக்கு மாவட்ட தலைவர் தமிழரசன், வடக்கு மாவட்ட நிதி செயலாளர் கண்ணன், மகளிரணி செயலாளர் முத்துமாரி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குருநாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் சீமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிதாஸ் மற்றும் காமராஜர் நகர் பகுதி மக்கள், நடுவக்குறிச்சி, வீரசிகாமணி புன்னையாபுரம், செவல்குளம் பகுதி மக்கள் உடன் இருந்தனர்.