அஞ்சுகிராமம், ஆக. 7 –
திமுக தலைவர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு நாள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் வழிக்காட்டுதலோடு
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூரில் நடந்தது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு மருங்கூர் பேருர் செயலாளர் மருங்கூர் மகேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்று திறனாளி அழகனாபுரம் மிக்கேல் ராஜன் என்பவர் கருணாநிதி பத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் சிந்தினார்.
மேலும் மருங்கூர் பேரூர் முன்னாள் செயலாளர்கள் சுபி, அலெக்சாண்டர், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிளாட்சன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்டார் மின், செந்தில், திமுக பிரமுகர்கள் பெலிக்ஸ், சித்திரை புத்திரன் விஜி, ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ரமா ரமேஷ், அமைப்பாளர்கள், ஒன்றிய, பேருர் துணை அமைப்பாளர்கள், பேரூர் நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.