திண்டுக்கல், ஜூலை 19 –
திண்டுக்கல் மாவட்டம், முத்தழகு பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் கர்மவீரர், படிக்காத மேதை என்று மக்களால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி தினமாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடக்க நிகழ்வாக இறைவணக்கம் பாடல் பாடி பரதம் மூலம் மாணவிகள் அழகாக நடனம் ஆடினார்கள். ஆசிரியை குழந்தை தெரஸ் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவிற்கு முத்தழகுபட்டி புனித பெரிய அந்தோனியார் ஆலய உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. வில்வராஜ் தலைமை வகித்தார். புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை அருட்சகோதரி L. ஜெயராணி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிக சங்கங்களின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட துணை தலைவர் ரவி சுப்பிரமணியம்,
CPM மாநகர செயலாளர் அரபு முகமது மற்றும் CPM மாநகர குழு உறுப்பினர் டியாகோ எமர்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் நடனம் மற்றும் கவிதை வாசிப்பு, காமராஜர் பாடல் குறு நாடகம் மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றை கேட்டு தங்களின் மாணவப் பருவ நினைவலைகளை வாழ்த்துரையில் வழங்கினார்கள். குழந்தைகள் கல்விக்கண் திறந்த காமராஜரை பற்றி பேச்சு, பாடல் மாறுவேடம் மற்றும் நடனப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழது பொருட்களை திண்டுக்கல்
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். தனுஷ்கோடி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில்
குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பள்ளியின் ஆசிரியை ஹெலன் ரூபி சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு தெரிவித்து ஆசிரியர் பிரமிளா நன்றி கூறினார்.