திண்டுக்கல், ஜூன் 28 –
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புதிய சூழலுக்கான அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எம். இன்ப லெட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சரவணன் தலைமை உரையில் மாணவர்களின் மேம்பாட்டிற்கான பெற்றோர்களின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
டீன் நிர்வாகம், முனைவர் எம். பொன்னையா பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எ.பரமேஸ்வரன், சுயஉதவிப்பிரிவின் துணைமுதல்வர் முனைவர் யு. நடராஜன், ஆலோசகர் முனைவர் எஸ். ராமசாமி, கல்வி இயக்குநர் முனைவர் என். மார்க்கண்டேயன் ஆகியோர் வாழ்த்துரையில் கல்லூரியின் சிறப்பம்சங்கள் மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள், மாணவர்களுடைய செயல்பாடுகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர்.
ஜி.டி.என். கல்லூரியின் தாளாளர் அரிமா டாக்டர் கே.ரெத்தினம் தனது சிறப்புரையில் இந்த நிகழ்வின் முக்கியத்துவம், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான ஏற்பாடுகள், கல்லூரியின் நோக்கம், மாணவர்களின் ஒழுக்கம், புதிய பாடப்பிரிவுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச தலைமைப் பண்புகள் பயிற்றுநர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் முனைவர் பால்சுசில் மாணவர் தம் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு, கல்வியின் முக்கியத்துவம், கல்லூரியின் சிறப்புகள், சிறந்த பெற்றோராய் திகழ்வது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் சிலர் தங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் இக்கல்லூரியை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். மதிய நிகழ்வாக முனைவர் பால்சுசில் முதலாமாண்டு மாணவர்களுக்கான சிறப்புரையில் மாணவர்கள் கல்லூரியின் சிறப்புகள், திறன்மேம்பாட்டிற்கான வழிமுறைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கணிதத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பி. பாண்டியம்மாள் நன்றியுரையாற்றினார்.