திண்டுக்கல், ஜூன் 20 –
திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13 – ஆம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா நிகழ்ச்சி PVK எலைட் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
P.S.N.A. கல்லூரி சேர்மன் Rtn.R.S.K.ரகுராம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கால்பந்து கழகத் மாநிலத் தலைவர் Rtn.S.சண்முகம், செஞ்சிலுவை சங்க மாவட்டச் சேர்மன் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன், Rev.Fr.S. பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைவராக Er.J. பீட்டர் சுரேஷ், செயலாளராக Er.S. விக்டர் தனபால், பொருளாளராக Er.S. ரியாஜ்அகமது, ஒருங்கிணைப்பாளர் Er.M.லக்ஷ்மன்தேவ்சிங், துணைத் தலைவர் Er.N.குணசீலன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக எழில் கன்ஸ்ட்ரக்சன் Er.S.ராஜேந்திரன், மண்டலத் தலைவர் Er.P. முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்களாக Er.U.உபையதுல்லாகான், Er.A.செந்தில்குமார், Er.B. ராஜ்குமார், Er.B.அமல்சதீஷ், Er.P. சரவணன், Er.S. சிவகுமார், Er.A.கண்ணன், Er.R. நவநீதகிருஷ்ணன், Er.A.லட்சுமி நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் நிறுவனத் தலைவர் Er.A.ஜான்சந்தியாகு, முன்னாள் தலைவர்கள் Er.E.K.குமரேசன், Er.A. ஜோசப்ராஜ், Er. K.தங்கதுரை, உடனடி முன்னாள் தலைவர் Er.R.ராஜேஷ்வரன், பொருளாளர் Er.M.சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இவ்விழாவை முன்னாள் தலைவர் Er.C.பெஞ்சமின் ஆரோக்கியம் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.



