திண்டுக்கல், அக். 4 –
திண்டுக்கல்லில் ONE TOUCH (ஒன் டச்) (one touch life’s change ) ஒரு தொடுதலில் வாழ்க்கை மாற்றம்) அறக்கட்டளை திறப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் உள்ள சுக்கான்மேடு சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ONE TOUCH (ஒன் டச்) நிர்வாக இயக்குனர் Pr.எஸ். டேவிட் பிரைனார்ட், டி. கெத்சியாள் ஆனந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் முன்னதாக கலை நிகழ்ச்சிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மெர்சி பவுண்டேஷன் மற்றும் ஆதவன் உலக செம்மொழி தமிழ் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மெர்சி செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி ONE TOUCH (ஒன் டச்) அறக்கட்டளையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தாய்க்கூடு பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் எஸ். குணவதி, தலைமை பணியாளர் (AIHBA) எம்.எஸ்.பி. கிரானைட்டுகள் நிர்வாகக் கூட்டாளர் லயன்.ஏ. கமலேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் (ஒன் டச்) ONE TOUCH நிர்வாக இயக்குனர் Pr.எஸ். டேவிட் பிரைனார்ட் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.



