தருமபுரி, ஆகஸ்ட் 7 –
தருமபுரி துரைசாமி நாயுடு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வகர்மா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பால்குடம் ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் கூழ் ஊற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து ஸ்ரீ விஸ்வகர்மா முத்துமாரியம்மன் திருக்கோவில் இருந்து பூ கரகம், மாவிளக்கு எடுத்துக் கொண்டு பெரியார் சிலை வழியாக ஊர்வலமாக காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ விருந்தாடி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.