தருமபுரி, செப்டம்பர் 20 –
தருமபுரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பகதூர் மாவீரன் தாத்தா இரட்டமலை சீனிவாசன் அவர்களின் 80-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பகதூர் மாவீரன் தாத்தா இரட்டமலை சீனிவாசன் அடிதட்டு மக்களின் விடுதலைக்காக போராடியவர். இந்திய ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்பட்டவர். பறையர் மகாஜன சபை நிறுவி ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக தொடர்ந்து பாடுபட்டவர். இவர் தனது 87-வது வயதில் உயிர் பிரிந்ததை ஒட்டி தமிழக அரசு தொடர்ந்து இதே நாளில் அரசு மரியாதை செய்து வருகிறது.
இதனை தொடர்ந்து தருமபுரி மைய மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன் தலைமையில் புகழஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை நிலைய செயலாளர் தகடூர். தமிழ்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் கி. கோவேந்தன், மண்டல செயலாளர் தமிழ் அன்வர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிராக அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த பகதூர் மாவீரன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், புகழஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிவஞானம், கிள்ளிவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் கம்சலா, சசிகலா, கல்பனா, முனியம்மாள், ரமிலா, கரிகாலன், குணசீலன் மோகன், முரளி, ராமன், லோகநாதன், கதீரவன், நல்லைசீனி, வெள்ளைசீனி, வடிவேல், தென்பாண்டி, புலிவளவன், அம்பேத்கர், விஜயன், செல்லதுரை, கனகராஜ், சிறுத்தை கார்த்திக் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய துணை நிலை அமைப்புகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



