தருமபுரி, ஜூலை 9 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழாவிற்கு பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே. சிவா தலைமையில் நடைபெற்றது. ஷோரூம் உரிமையாளர் ஜெகதீஷ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் கேசவராஜ், விமல்ராஜ், சக்திதரன், மங்களகணபதி முருகேசன், ராஜாமணிசரவணன், நகை கடைசங்க தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கை ஏற்றி வைத்து புதிய மொபைல் ஷோரூமை திறந்து வைத்தார். வணிகர் சங்க தலைவர் முத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், அன்புமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், பாஜக நகர் மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேளாவள்ளி சேகர், கணபதி, சின்னவன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன், தொழிலதிபர்கள் தண்டாயுதபாணி, சிவாஜி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பி.எல்.ரவி, சரவணன், விமலன், குருமணி, பிரியாகுமார், இதயாத்துல்லா, பத்தேகான் மற்றும் குமரன், தளபதி, முருகன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழிலதிபர் விஜி நன்றி தெரிவித்தார்.