தருமபுரி, ஏப்ரல் 20 –
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் தருமபுரி திட்ட செயலாளர் என்.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் மேலும் மேலும் செழித்திட! ,மகளிர் வென்றிட!, நாட்டின் உள் கட்டமைப்பு மேம்பட,! இளைஞர்கள் முன்னேற்றம் கண்டிட! விவசாயிகள் மகிழ்ந்திட! தமிழ்நாடு தழைத்திட! மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் கண்டிட ! அனைத்து தரப்பு மக்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இளவல் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” அவர்களின் திராவிட “மாடல் ஆட்சி” தொடர்ந்திட! மலர்ந்திட! தமிழ்நாடு வென்றிட! வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026 இல் 200 – க்கும் அதிகமான தொகுதிகளில், மாபெரும் வெற்றி! மகத்தான வெற்றி! வரலாற்று சிறப்புமிக்க வெற்றி !பெற்று 2.0 ஆட்சி அமைத்திட, “தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் “தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிளைகளின் சார்பாக பேராதரவு அளிக்கிறது இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



