தருமபுரி, ஆகஸ்ட் 9 –
தருமபுரி நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்சேகர் வரவேற்றார். துணைத்தலைவர் நித்தியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக, அதிமுக, விசிக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாலை 4:35 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 4:38 மணிக்கு கூட்டம் தொடங்கியது. திருக்குறள் படிக்கப்பட்டது. மன்றத்தில் 52 பொருட்கள் தீர்மானங்களாக வைக்கப்பட்டன. இதில் 35 பொருட்களின் தீர்மானத்தை ரத்து செய்யும்படி அதிமுக கவுன்சிலர்கள் 13 பேர் கையெழுத்திட்டு ஆணையரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து நகராட்சி தலைவர் தீர்மானம் நிறைவேற்ற 52 பொருள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மீது விவாதம் உண்டா என கேட்டார். கவுன்சிலர்கள் யாரும் பதில் கூறவில்லை. தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் 18 பேர் கையெழுத்திட்ட நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்று நகராட்சித் தலைவர் கூறி இருக்கையை விட்டு எழுந்து புறப்பட்டார். பின்னர் ஆணையர், துணைத் தலைவர், திமுக கவுன்சிலர்களும் இருக்கை விட்டு எழுந்து புறப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நேரில் வந்து சமரசம் செய்தனர். அதன் பின் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையர் சேகர் நேரில் வந்து சமரசம் செய்தார். அதன்பின் நகராட்சி ஆணையர் அறையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் உள்ளாட்சி மன்ற விதியின் படி மன்றத்தில் வைத்து பொருட்கள் விவாதிக்க வேண்டியது கூட்டத்தில் தலைவர் தலைமையில் தான் விவாதிக்க முடியும். என்னிடம் விவாதிக்க அதிகாரம் இல்லை. உங்களுடைய பொதுவான கோரிக்கையை கூறுங்கள். குறித்து வைத்துக் கொள்கிறேன் என்றார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.