தருமபுரி, ஆகஸ்ட் 11 –
தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரூர் கச்சேரி மேட்டில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொல். திருமாவளவன் பேசியதாவது: முதன் முதலாக தமிழகத்தில் தருமபுரி கிழக்கு மாவட்டம் விசிக சார்பில் ரூ. 27 லட்ச ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ரூ.27 லட்சம் ரூபாய் வழங்கிய மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தேர்தலில் மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டால் ரூ.27 லட்ச ரூபாய் ஒரு மணி நேரம் செலவு கூட போதாது. திமுகவோடு ஒப்பிட்டால் ஒரு நொடிக்கு கூட போதாது.
இந்த ஆண்டு என் பிறந்தநாள் கருப்பொருள் மதசார்பின்மை காப்போம் என்பது தான். பாஜக இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளோடு அதிமுக கூட்டணி சேர்ந்து இருக்கிறது. இது மதசார்பின்மைக்கு எதிரானது. பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நான் அவமதிக்கவில்லை. அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. தமிழகஅரசியலில் கருணாநிதி எதிர்ப்பு என்பதை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பதை சொல்வதற்காக ஒரு ஒப்பீடு செய்தேன் அவ்வளவுதான் என பேசினார். இதை வைத்து முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி விமர்சனம் செய்வது சரியல்ல என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தலைமை நிலைய செயலாளர் தகடூர் மா. தமிழ்ச்செல்வன், அமைப்பு செயலாளர் கி. கோவேந்தன், முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு. நந்தன், தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மாநில துணை செயலாளர் செந்தில், மண்டல செயலாளர் தமிழ் அன்வர், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி, ஜிம் மோகன், அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், நகரசெயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன், ராமச்சந்திரன், தொகுதி துணை செயலாளர் கேசவன், ஒன்றிய துணை செயலாளர் தீர்த்தகிரி, கவுன்சிலர்கள் ரகுநாத், முருகன், சோலை ஆனந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



