தருமபுரி, செப்டம்பர் 10 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, உபகரணங்கள் வேண்டி மொத்தம் 453 மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



