போகலூர், ஜுலை 12 –
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் யாதவர் சங்கம் திருமண மஹாலில் அலங்கரிக்கப்பட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் திரு உருவப் படத்திற்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் மாவட்ட தலைவர் கேலக்ஸி பாலா தலைமையில் தாலுகா தலைவர் மணி மாதவன் முன்னிலையில் யாதவர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் தர்மர் மற்றும் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக கட்சி சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் அம்மா பேரவை இணைச் செயலாளர் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்.ஜி. ரத்தினம், மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன், மாவட்டச் செயலாளர் நாகராஜன் மற்றும் மாநில மாவட்ட பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாவீரன் அழகுமுத்துக்கோன் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன், முன்னாள் காயர் போர்டு சேர்மன் குப்புராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் கட்சி மாவட்ட தலைவர் அஜித்குமார் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.