திருப்பத்தூர், ஜூலை 14 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்,
கந்திலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு பணி நடைபெற்றது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்கி கட்சி நிர்வாகிகள், BLA- 2, BDA( பூத் டிஜிட்டல் ஏஜென்ட்) மற்றும் தேர்தல் பணி குறித்து கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதால் கந்திலி மத்திய ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு கூட்ட அனுமதி அடையாள அட்டை, திமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பத்தூருக்கு வருகை தந்தபோது சிறப்பாக பணியாற்றிய ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி திருமுருகன் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் செந்தில், ராவுத்தம்பட்டி கிளை செயலாளர் தசரதன்( BLA- 2), ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் சக்திவேல், ஒன்றிய சமூக வலைதள மகளிர் ஒருங்கிணைப்பாளர் சோனியா சக்திவேல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் பெற்றுக்கொண்டனர்.