தேனி, மார்ச் 18 –
தேனி மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 200 போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் நேற்று (17.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வாக்குச்சாவடிகளுக்கான அடிப்படை வசதிகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT கருவிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நிலை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. தேர்தல் பணிகள் அனைத்தும் வெளிப்படையாகவும், சீர்மையாகவும் நடைபெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் தொடர்புடைய துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் உடன் கலந்து கொண்டனர்.



