கன்னியாகுமரி, செப். 11 –
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பணிகளில் ஆய்வு பணிகள் நடத்தினர். பின்னர் வேல்முருகன் எம்எல்ஏ நிருபர்களிடம் பேட்டி அளித்தார். பேட்டியில் கூறியதாவது: திருவள்ளுவர் சிலையை பார்க்க ஏதுவாக பால வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று நான் குழுவின் தலைவராக இருந்தபோது அரசுக்கு பரிந்துரை செய்தேன். அதனை முழு மனதுடன் பரிசீலனை செய்து தமிழ்நாடு முதலமைச்சர், நெடுஞ்சாலை துறை அமைச்சரும் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் ரூபாய் 37 கோடி செலவிடப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடந்த போது, அந்த தருணத்தில் மேல் இருந்த கனமான சுத்தியல் விழுந்த காரணத்தினால் ஒரு கண்ணாடி சிதிலம் அடைந்தது. உடனே செய்தி வெளியான நிலையில், மாவட்ட கலெக்டர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அரசு கவனத்திற்கு எடுத்து சென்று உடனடியாக அந்தப் பகுதி மாற்றப்பட்டுள்ளது. 600 பேர் ஒரே நேரத்தில் இந்த கண்ணாடி பாலத்தின் மீது நின்று கடலையும் அய்யன் திருவள்ளுவர் சிலை பார்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்ணாடி பலம் சிறு கீறல் மாற்றப்பட்டு பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மக்களின் கோரிக்கையான கப்பல் போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து நேரடியாக திருவள்ளுவர் சிலை பார்க்க வசதி வாய்ப்புகளை எதிர்காலத்தில் செய்து தருவதற்கு உருவாக்க பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.


