தென்காசி, ஜூலை 31 –
தென்காசி நகரில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், முதன்மை செயலாளர் முனைவர் சீனிவாசன், சட்டமன்ற உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), தளபதி (மதுரை வடக்கு), நல்லதம்பி (திருப்பத்தூர்), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணாநகர்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.