முதுகுளத்தூர், ஜூலை 30 –
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு. கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ப. ஜெகநாத பூபதி, மாவட்ட பொருளாளர் தி. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் வி. இராஜேஸ்வரன், சிவக்குமார் கூட்டாக அனைவரையும் வரவேற்பு செய்தார். மாநில ஒருங்கினைப்பாளர் அசோக் குமார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம நிர்வாக அலுவலருக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வருகிற 23.8.2025-ல் பீரா கூட்டமைப்பு நடத்தும் கோரிக்கை மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கௌரவ தலைவர் நம்பு ராஜேஸ், மாவட்ட துணைத்தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ், மாவட்ட இணை செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜேசு அருள், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அன்சர் ராஜா உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் மணிமூர்த்தி நன்றி கூறினார்.