வேலூர், ஜூலை 04 –
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் நிர்வாகம் மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடான மாறுதலை கண்டித்தும், பதவி உயர்வின்றி நடைபெறும் பெயரளவிலான மாறுதல் கலந்தாய்வு உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வுடன் கூடிய மாறுதல் கலந்தாய்வை நடத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலம் தழுவிய அளவிலான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி ஆர். அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ். சபீதா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆ. செல்வம் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஆ. ஜோசப்அன்னையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் எஸ். ரஞ்சன் தயாளதாஸ் சிறப்புரையாற்றினார். நிறைவாக அணைக்கட்டு வட்டார செயலாளர் எம். தினேஷ்குமார் நன்றியுரையாற்றினார்.