கோவை, ஜூலை 29 –
மாண்பமை தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் எஸ். ரவிவர்மன் மற்றும் மூத்த ஆய்வாளர் திரு. லிஸ்டர் ஆகியோர் அடங்கிய குழுவானது கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் PSG தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தங்கி முதுகலை மருத்துவம் பயின்று வந்த கந்தசாமி என்பவரின் மகள் பவபூரணி (29) என்பவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கல்லூரி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்தார்கள். மேற்படி விசாரணையில் மாநகர துணை ஆணையர், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு கோட்டம்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் உடன் இருந்தார்கள்.