தஞ்சாவூர், ஜூன் 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் உள்ள யூத் ரெட் கிராஸ் சார்பாக போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி, பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மன்னர் சரபோஜி அரசு கல்லூரி (தன்னாட்சி) தஞ்சாவூர்,
ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி) பூண்டி, எஸ்.கே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் திருப்பனந்தாள், ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாபநாசம், இதயா பெண்கள் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம், அரசு பாலிடெக்னிக் கும்பகோணம், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி கும்பகோணம், அரசர் கல்லூரி திருவையாறு, அரசு பெண்கள் கலைக் கல்லூரி ஒரத்தநாடு, அடைக்கலமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வல்லம், தமிழவேள் உமாமகேசுவர் கலைக் கல்லூரி கரந்தை, ஏனாதி ராஜயப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டுக்கோட்டை, அல்அமீன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி கும்பகோணம், சுவாமி விவேகானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி வல்லம் ஆகிய கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சிகளில் முதல்வர்கள் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.