தஞ்சாவூர், ஜூலை 29 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறை, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் ஒரு வார கால பணி பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் பொறுப்பு பன்னீர்செல்வம், குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி, ஆங்கிலத் துறை தலைவர் ரமா பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் சபர்நிஷா, கவிதா வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மொழிபெயர்ப்புத் துறை தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான இரா.சு. முருகன் அனைவரையும் வரவேற்றார். மொழிபெயர்ப்பு துறை இணை பேராசிரியரும் இணை ஒருங்கிணைப்பாளருமான வீரலெஷ்மி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மொழிபெயர்ப்பு துறை முனைவர் பட்ட மாணவி விவேதா தொகுத்து வழங்கினார்.