தஞ்சாவூர், ஜூலை 25 –
திருவையாறு ஐய்யாரப்பர் கோயிலில் ஆடிப்பூர பெருவிழாவில் மெலட்டூர் பாகவதமேளா வித்யாலயா, திருவையாறு ஒளவை தொடக்கப் பள்ளி திருமானூர் பர்லியன்ட் பள்ளி மாணவர்களின் அப்பர் சரித்திரம் கைலாய காட்சி நிருத்திய நாடகம் அம்மன் கொலு மண்டபத்தில் நடந்தது. ஐய்யாறப்பர் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் அப்பர் கயிலை காட்சி வரலாற்று நாடகத்தை துவக்கி வைத்து நாட்டிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கினார்.
கம்பன் வணங்கிய கலைமகள் என்ற தலைப்பில் ஒளவை கோட்ட நிறுவனர் முனைவர் கலைவேந்தன் சொற்பொழிவு நடந்தது. இதில் நாட்டியக் கலைஞர் பெங்களூரு பிரியம்வதா முரளி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்சவ சபை , ஔவைப்பள்ளி ஆசிரியைகள் தீபா, மஞ்சுளா, நாட்டியக் கலைஞர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.