தஞ்சாவூர், ஜூலை 2 –
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடமாடும் கால்நடை மருந்தக சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சாவூர் பள்ளியக்ரகாரத்தில் 1-வது வார்டு வெண்ணாற்றங்கரை காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியில் நடந்தது.
இந்த முகாமுக்கு மாநகர கவுன்சிலர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் எம்பி முரசொலி, மேயர் சண். ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கால்நடை உரிமையாளர்களுக்கு பால் கேன், கயிறு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், கால்நடை பண்ணை அமைக்க பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த முகாம் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது . முகாமில் கரந்தை பகுதி திமுக செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.