தஞ்சாவூர் ஜூன் 28 –
தஞ்சாவூர் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு மீட்பு பணி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் மீட்பு பணி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த உபகரணங்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏராளமான உபகரணங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதன்படி ஆப்தமித்ரா நிதியின் மூலம் மோட்டாருடன் கூடிய ஒரு பைபர் படகு, 32 லைட் ஜாக்கெட், 12 சோலார் டார்ச் லைட், 12 பாதுகாப்பு கையுறை, 30 மீட்டர் நீளம் உள்ள 6 நைலான்கயிறு, 130 அடி உடைய 20 நைலான் கயிறு, 20 லைப் பாய், 30 தீயணைப்பான் கருவிகள், 6 ஸ்ட்ரெச்சர், 16 பாதுகாப்புகண்ணாடிகள், 4 நீட்டிப்பு ஏணிகள் (15 அடி முதல் 26 அடி), 2 ஏணிகள் (15 அடி ), 4 ஜெயின் ஷா, 1 பைபர் படகு மற்றும் 40 குதிரை திறன் கொண்ட மோட்டார், 10 பாம்பு பிடிக்கும் கருவி ( 6 அடி), 20 அரை முகமூடிகள் , 8 வாக்கி டாக்கி உள்பட ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள மீட்பு பணி உபகரணங்கள் இருந்தன.
இந்த உபகரணங்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் உபயோகத்திற்காக அந்த துறை சார்பில் தஞ்சாவூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் குமாரிடம் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், தஞ்சாவூர் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முருகேசன், கும்பகோணம் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை நிலய அலுவலர் செல்வம், நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் அழகேசன், நிலைய அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.