தஞ்சாவூர். மே 6
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூ ரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஹீமோபிலியா நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை கள் குறித்து கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன்கள், மருந்துகள் வழங்கப்பட்டது
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கூறியதாவது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 முதல் 50 நோயாளிகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் குறித்து விழிப்புணர்வுடன் செயல் பட்டு ஆரம்பத்தில் இருந்தே சிகிச் சை அளித்தால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார்
உடன் துணை முதல்வர் ஆறுமுகம்மருத்துவ கண்காணிப் பாளர் ராமசாமி, பொது மருத்துவ த்துறை தலைவர் கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!

Leave a comment