தஞ்சாவூர், ஜூலை 24 –
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் தொடக்கம். காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவை துவக்கப்பட்டது.
இதில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.