தக்கலை, செப். 11 –
தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (31). கார் டிரைவரான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவில் தக்கலை புறப்பட்டுக் கொண்டிருந்தார். கல்லுவிளைப் பகுதியில் வரும்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் அஸ்வின் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அஸ்வின் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்தவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தந்தை மரிய வின்சென்ட் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



