தக்கலை, ஆக. 3 –
தக்கலை முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன். இவரது மனைவி விஜயா (33). நேற்று முன்தினம் மாலை விஜயா மற்றும் அவரது தோழிகள் ரஞ்சனி (37), கல்லூரி பேராசிரியை ஆட்லின் ரஞ்சனி (46) ஆகியோர் முளகுமூடு தேவாலய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் 3 பேர் மீது மோதி, மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் காரை அஜாக்கிரதையாக ஓட்டிய அதே பகுதியை சேர்ந்த துணை ராணுவ படை வீரர் ராஜத் வாசன் (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.