திருப்பத்தூர், ஆக. 21 –
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த தமிழரசி மற்றும் அக்ராகரம் பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் என்ற 2 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ஒப்புகை சீட்டுகளை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி ஆகியோர் வழங்கினர்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு. பூஷன் குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் தீபா, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதிஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஊராட்சிமன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



