கோவை, செப். 12 –
கோவை ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேச பள்ளியின் சார்பில் சர்வதேச தொண்டு தினம் கோவை மாநகராட்சி கோவில்மேடு பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி கோவை மாநகராட்சி கோவில்மேடு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பள்ளி நூலகத்திற்கு பள்ளிக்குழந்தைகள் படித்து பயனுறும் வகையில் மிகச்சிறந்த புத்தங்கங்களை ஜிஆர்ஜி நிர்வாகத்தின் தாளாளர் டாக்டர். நந்தினி ரங்கசாமி அவர்களின் மேலான ஆதரவுடனும் ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளியின் முதல்வர் உமா வழங்க பள்ளியின் தலைமையாசிரியர் வேணுகா மெய்யன்பன் பெற்றுக்கொண்டார்.
ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளியின் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் பங்குபெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும், இப்பள்ளிக்கு புத்தகங்களை ஒரு தொடர்நிகழ்வாக இவ்வாண்டு முழுதும் வழங்கிட ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளி முன்வந்துள்ளது. இப்பள்ளியின் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இதில் ஆர்வமுடன் நூல்களை வழங்கி பேருதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளி மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்தது.



