சேலம், ஜூலை 13 –
சேலம் மூன்று ரோடு பகுதி ஆரோக்கியா மருத்துவமனை அருகில் மிஸ்டர் பிக்கி பன்றி இறைச்சி உணவகம் பிரம்மாண்ட முறையில் திறக்கப்பட்டது. இங்கு “ட்ரோக்” (TROCK) வகையைச் சேர்ந்த பன்றி இறைச்சி சுத்தமான முறையிலும், சுகாதாரமான முறையிலும், எந்தவித கெமிக்கலும் கலப்படமும் இல்லாத எண்ணையாலும், கிராமிய முறையில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட மசாலாக்களை கொண்டு பாரம்பரியமிக்க முறையில் பன்றி இறைச்சி (போர்க்) உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு பத்து வகையான தரமான பன்றி இறைச்சி (போர்க்) உணவுகள் விதவிதமாக தயாரிக்கப்படுகிறது. 100 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது கார் பார்க்கிங் வசதி உள்ளது.
இந்த உணவகம் சுரேஷ்குமார் தலைமையில், தியாகராஜன் சுந்தரலிங்கம் மற்றும் மேலாளர் தாதை மோகன்ராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட அமைப்பாளர் தேவிபாலன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிறுவனத்தின் சுமதி, தனலட்சுமி, மற்றும் உணவக பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



