திருப்பூர், ஜூலை 19 –
தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவை நிறுவன தலைவர் பசும்பொன் பாலு தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘நேற்றுமுன் தினம் காங்கயம் அருகே ஒரு ஓட்டலில் நான் சாப்பிட சென்றிருந்தேன். அங்கு காங்கயம் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து, உடனே
அங்கிருந்து என்னை செல்லும்படி கூறினார். மேலும் எனது 2 செல்போன்களையும் பறித்தார். செல்போனை கேட்டதற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறினார்.
1 மணி நேரத்துக்கும் மேலாக என்னை அலைக்கழித்தனர். அத்துடன் இந்த பக்கம் வரக்கூடாது என என்னிடம் எழுதி வாங்கினார்கள். என் மீது வழக்கு எதுவும் இல்லை. எதற்காக என் செல்போனை வாங்கி மிரட்டினார்கள் என்று தெரியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருகிற 27-ந் தேதி காவல்துறையை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.