சென்னை, ஆகஸ்ட் 22 –
சென்னை கொருக்குப்பேட்டை ஜீவாநகர், பாரதி நகர் 1-வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
4-வது முறையாக ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பூர்வாங்க பூஜைகள், யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் கும்பத்திற்கு சர்வ சாதகம் கே.எஸ்.கே வினோத்குமார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு பின்னர் 1000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர், பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், சென்னை மாநகராட்சி 47 வது வார்டு உறுப்பினர் மணிமேகலை, வட்ட செயலாளர்கள் ஏழுமலை, ராஜன் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளான கே. பாபு, த. சீனிவாசன், அரிஹரன், ஆனந்தன், சேகர், சிங்காரம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நிதியுதவியும் பொருள் உதவியும் ஒத்துழைப்பும் செய்து மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உதவி செய்தனர்.



