அரியலூர், மே:14
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இலங்கைச்சேரி கிராமத்திற்கு செந்துறை தாலுக்கா அலுவலகம் வழியாக செல்லும் சாலை 7 வருடங்களாக கரடு முரடாக காணப்பட்ட இந்த சாலையை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதிமுக ஒப்பந்ததாரர் சாலையை அமைத்துக் கொடுத்தார்.சாலை தரம் இல்லாததால் சில மாதங்களில் தார்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்பட்டது. பிறகு மூன்று வருடங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக அரசால் டெண்டர் விடப்பட்டு திமுக ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்து சாலை போடும் பணியை செய்து வருகிறார். இரண்டு அடுக்கு ஜல்லி கற்கள் வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்கள் பதித்து உள்ளனர் அதுவும் ஒருசில இடங்களில் கற்கள் பெயர்ந்து குழி விழுந்து இறைந்து காணப்படுவதால் பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கற்கள் உள்ளது.கிரவல் மண் கொண்டு நிறைவி 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இருந்தும் இன்னும் தார் ஊற்றி சாலை அமைக்கும் பணி இன்னும் ஆரம்பிக்க வில்லை.மேலும் இந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் புழுதி பறக்கும் அந்த அளவிற்கு மோசம் புழுதி மூக்கில் சென்று சுவாச கோளாறு ஏற்படுகிறது. இதனால் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது அந்த அளவிற்கு சாலையில் போடப்பட்ட செம்மண் புழுதி பறக்கிறது. அதனால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சுகாதாரத்துறையை நாடவேண்டிய சூழல் ஏற்பட கூடும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையோடு கூறி இந்த தார் சாலை போடும் பணியை தொடங்க ஒப்பந்ததாரருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.