சென்னை, ஜூலை 8 –
சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் 3-வது முறையாக இலவச பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு அறக்கட்டளை நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் அப்போலோ மருத்துவமனை சார்பில் சர்க்கரை இரத்த பரிசோதனை, பொது மருத்துவம் ஆகியவை பார்க்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச மருந்து மற்றும் மாத்திரை வழங்கப்பட்டன.
மேலும் கண் மருத்துவர்கள் சார்பில் கண் பார்வை குறைபாடு, மாலைக்கண், விழித்திரை பாதிப்பு, கிட்ட பார்வை, தூரபார்வை ஆகிய பாதிப்புகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கண் கண்ணாடி அணிய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும் ஆத்ம சார்பில் இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், இந்தியன் மருத்துவ அசோசியேஷன் சார்பில் பல் மருத்துவமும் பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த இலவச பொது மற்றும் கண் சிகிச்சை மருத்து முகாமில் தூய்மை பணியார்கள், ஊராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் வனிதா சுப்புராயலு, பொருளாளர் டாக்டர் பிருந்தா மற்றும் நிர்வாகிகள் ரோகினி, லோகேஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.