சூளகரை, ஜூன் 28 –
மத்தூர் தெற்கு ஒன்றியம் சூளகரை ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மகளிருக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செய்லாளர் முரளி விஜய், இணை செய்லாலாளர் தமோதிரன் ஆகியோரின் ஆலோசனைப்படி மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, இளைஞர் அணி ஜெகன் ஆகியோர் முன்னிலையில் சூளகரை ஊராட்சி செயலாளர் லோகேஷ் (எ) பரத் தலைமையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு சூளகரை ஊராட்சி சார்பில் 200 மகளிருக்கு 200 புடவைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகி திம்மராயன் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.